No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூஜையறையும், கடன் பிரச்சனையும் !!

Dec 10, 2018   Ananthi   584    வாஸ்து 

இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகள் உங்கள் வீட்டில் இருக்குமானால் கடனும், நோயும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

1. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி முழுவதும் மூடிய அமைப்பு.

2. வாசல்கள், ஜன்னல்கள் அனைத்தும் நீச்சமான பகுதியில் இருப்பது.

3. தென்கிழக்கில் வீட்டின் உள்பகுதியில் படி அமைப்பு, ஆழ்துளைகிணறு, கழிவறைகள், கழிவறை குழிகள், தரைக்குக்கீழ் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது.

4. தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூமாக பயன்படுத்தாமல் வேறு வேறு தேவைகளுக்காக அந்த இடத்தை பயன்படுத்துவது,

5. தெற்கு பார்த்த வீடு அமைத்துக் கொண்டு, தெற்குப்பக்கம் அதிக காலி இடத்தை விட்டும், வடக்கு பக்கம் காலி இடம் விடாமலும் வீட்டை அமைத்துக் கொள்வது.

6. வடக்கு பகுதியில் உள்ள தாய் சுவரை பொது சுவராக பயன்படுத்துவது.

7. கிழக்கு பகுதியில் உள்ள தாய் சுவரை பொது சுவராக பயன்படுத்துவது.

8. நான்கு புறமும் மதில் சுவர் இல்லாமல் இருப்பது.

9. வடமேற்கு உட்பகுதியில் மாடிப்படி அமைப்பு மற்றும் ஆழ்துளைகிணறு, தரைக்குக்கீழ் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு வருவது.

இதுபோன்ற அமைப்புகள் இருக்குமானால் கடன்களும், நோய்களும் இருந்து கொண்டேதான் இருக்கும்.


Share this valuable content with your friends