No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பனைப் பற்றிய அரியத் தகவல்கள் !!

Dec 05, 2018   Ananthi   484    ஆன்மிகம் 

🌟 சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌟 ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

🌟 சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.

🌟 சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.

🌟 சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.

🌟 சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

🌟 ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

🌟 ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

🌟 சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

🌟 சபரிமலை ஐயப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

🌟 சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

🌟 பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன.

🌟 திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என்பதைப் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.


Share this valuable content with your friends


Tags

நீங்கள் புது வீடு கட்டுகிறீர்களா? அப்படியென்றால் இவைகளெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து வழிபடலாமா? பஞ்சபட்சி சாஸ்திரம்... ஆந்தை பட்சி... என்ன சொல்கிறது? தாய்க்கும் நாரதர் friday horoscope தேசிய கடற்படை தினம் ஆண்களுக்கு முதுகில் மச்சம் திருச்செந்தூர் கோவில் தல வரலாறு சந்திர திசை நடந்தால் என்ன கண்ணடி படக்கூடாது என்கிறார்களே அது உண்மையா? வீட்டில் பாரிஜாதம் வளர்ப்பது நல்லதா? செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? குழந்தை கொடி சுற்றி பிறக்கலாமா? 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? பொருள் ஈட்டும் திறமை உடையவர்கள் புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக கடித தினம் வர்க்கோத்தமம் என்றால் என்ன? கந்தசஷ்டி விரத பலன்கள்