No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது ஏன்?

Dec 03, 2018   Ananthi   456    ஆன்மிகம் 

🌟 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

🌟 மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தால் உங்களுடைய கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இன்று ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது ஏன்? என்று பார்ப்போம்.

நோய்களை போக்க வழிபாடு :

🌟 ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக்கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும், வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

நெய் அபிஷேகம் :

🌟 சபரிமலைக்கு சென்றதும் கோவிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தர்களுக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

🌟 மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.

🌟 ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம

ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம.


Share this valuable content with your friends


Tags

சுக்கிரன் 12ம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் 20.05.2020 rasipalan in pdf format wednesday நண்பனுக்குத் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி மாத ராசிபலன்கள் (PDF) வடிவில்...!! மீன ராசியில் கேது இருந்தால் என்ன பலன்? sivapuranam தினசரி ராசிபலன் (15.03.2022) குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? april 27 5ம் அதிபதி விவசாயியை கனவில் கண்டால் என்ன பலன்? உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் 7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்? புதிய வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.12.2018 Rasipalan in PDF Format !! படுத்துக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் 4ல் புதன் இருந்தால் என்ன பலன்?