வீட்டின் வேலை பாதியில் நிற்பதற்கும், கடன் சுமை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பதற்கும் வாஸ்து தான் காரணமா?
ஜாதகத்தில் நான்காவது இடத்தில் உள்ள சுப கிரகங்கள் தொடர்பை பொறுத்து உங்கள் வீடு, கட்டிடம் அமையும்.
இங்கு குறிப்பிடும் விதிமுறைகளை நீங்கள் முன்கூட்டியே கடைபிடிக்காமல் இருந்தால் உங்கள் வீடு பாதியில் நிற்பது என்பது உறுதி.
வாஸ்து தவறுகள் :
1. நல்ல நாளில் பூமி பூஜை போடாதது.
2. சரியான பிளான் இல்லாதது.
3. தவறான இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது.
4. தவறான தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது.
5. இயற்கையிலேயே பூமி அமைப்பு உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருப்பது.
6. பக்கத்து வீட்டின் அமைப்புகள் கிணறு, ஆழ்துளைக்கிணறு, கழிவுநீர்தொட்டி போன்றவற்றின் பாதிப்புகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவைகள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வீடு கட்ட ஆரம்பிப்பது.
7. நம் வீட்டின் அருகில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்கு பொதுவான நீர் நிலைகளின் பாதிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது.
8. உங்களுடைய கட்டிட அமைப்பில் வடகிழக்கு முழுவதும் மூடியும்,
🌟 வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிட அமைப்பும்,
🌟 வடகிழக்கில் படி போன்ற அமைப்புகளும்,
🌟 வடக்கை விட தெற்கு அதிக காலியிடமும்,
🌟 கிழக்கை விட மேற்கு அதிக காலியிடமும் என இதுபோன்ற இன்னும் குறிப்பிடும்படியான பல தவறுகள் இருப்பது
🌟 தற்சமயம் நீங்கள் குடியிருக்கும் வீடும், நீங்கள் கட்டக்கூடிய வீடும் இரண்டுமே தவறாக இருக்கும் பட்சத்தில் இருமடங்காக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
மேற்கூறிய விஷ யங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத பொழுது கட்டிடவேலையில் தடை ஏற்படுவது என்பது இயல்பே.