🌟 சபரிமலை ஐயப்பனிற்கு 48 நாள் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.
🌟 சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது தான் மரபு.
🌟 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.
🌟 கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே ஐயப்பன் விரும்புகிறார்.
🌟 சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.
🌟 சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
🌟 மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவள் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில் அழுகையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
🌟 நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.
🌟 பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள்.
🌟 சபரிமலை அய்யப்பன் கோவிலில் தத்துவமசி எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய் என்று பொருள்.
🌟 சபரிமலை சென்று வந்தவர்கள் ஐயப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.