No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் நிரந்தர பணவரவும் !!

Nov 30, 2018   Ananthi   542    வாஸ்து 

வாஸ்து சாஸ்திரத்தில் சில அடிப்படையான கட்டிட அமைப்புகள் உள்ள இடங்களில் நீங்கள் இருந்தால் இயல்பாகவே உங்களுக்கும் அந்த பணம் என்கிற விஷயம் நிரந்தரமாக கிடைக்கும். நல்ல சேமிப்பும் உங்களிடம் இருக்கும்

கட்டிட அமைப்புகள் :

1. வடக்கும், கிழக்கும் நிறைய திறந்தவெளி உள்ள அமைப்புகள்.

2. வடக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும், கிழக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும் திறந்தால் வானம் தெரியும் படியான அமைப்புகள்.

3. வடகிழக்கில் உச்ச பகுதியில் தலைவாசல் அமைப்பு.

4. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மதில் சுவருக்கும், வீட்டிற்கும் இடைப்பகுதியில் நிறைய இடைவெளிகளில் இருப்பது.

5. வடகிழக்கு, வடமேற்கு மேற்கு, தென்கிழக்கு தெற்கு ஆகிய பகுதிகளில் தெருப்பார்வை அல்லது தெருக்குத்து போன்ற அமைப்புகள் இருப்பது.

6. வீட்டினுள் வடகிழக்கு பகுதியை வரவேற்பறையாக உபயோகிப்பது.

7. தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூமாக உபயோகிப்பது.

8. தரை தளம், முதல் தளம் பிரமிடு போல் இல்லாமலும் ஒரு பக்கம் சரிந்து இல்லாமலும் இரண்டும் சமமாக இருப்பது,

9. வீட்டைச் சுற்றிலும் உள்ள இயற்கை சூழ்நிலைகளான மலை, குன்று போன்ற அமைப்புகள் நமக்கு சாதகமாக இருப்பது,

10. நான்கு புறமும் மதில் அவசியமாக இருப்பது, மதில் சுவரின் உச்சமான பகுதியில் முக்கியமான கேட் வைத்திருப்பது,

11. ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற எதிர்மறையான விஷயங்கள் நம்முடைய வீட்டிற்கு மிக அருகில் வராமல் இருப்பது,

12. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அளவான சிறிய அளவில் தாழ்வாரங்கள், பந்தல், போர்டிகோ அமைத்து இருப்பது,

13. கார் பார்க்கிங், காவலர்கள் அறை, நாய் கூண்டு போன்றவைகளுக்கு என்று பிரத்தியோகமான இடத்தை உருவாக்கி இருப்பது,

14. மதில் சுவருக்கு வெளிப்புறத்திலும், தரை தளத்திலும் தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு சற்று தாழ்வாகவும் இருப்பது,

15. எந்த ஒரு மூலையையும் வளர்ச்சியும், தளர்ச்சியும் இல்லாமல் கட்டிடங்களை உருவாக்கி இருப்பது,

16. திசைகாட்டியாக சரியான கோணத்தில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இயற்கையாகவே கட்டிடங்கள் இருப்பது.

மேற்கூறிய அமைப்புள்ள வீடுகள் ஒருவருக்கு நிரந்தரமான பணத்தையும், நிரந்தரமாக சேமிப்பையும் சதா சர்வகாலம் கொடுத்துக் கொண்டிருக்கும்.

அதேபோல் மேற்கூறிய அமைப்புக்கு எதிரான வீட்டில் ஒருவர் குடியிருக்கும் பட்சத்தில் பணவரவு இருக்காது.


Share this valuable content with your friends


Tags

january 12 important days!! வார ராசிபலன் (20.04.2020 - 26.04.2020) PDF வடிவில் !! மார்கழி மாதம் பற்றிய தவறான அபிப்ராயம்!!... தெற்கு பகுதியின் நன்மைகள் தலைமை பண்பு வகிக்கக்கூடியவர்கள் இவர்களே! மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? thali குணநலன் பலவிதமான திறமைகளை உடையவர்கள் நிறைய குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? varahi devi 05.03.2020 today horoscope வேகவைத்த முட்டையை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான்கு மாதங்கள் வித்தியாசம் உள்ள வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா? காது குத்தாமல் திருமணம் செய்யலாமா? அம்மன் சாமியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? matham குட்டி போடுவது போன்றும் கனவு கண்டால் என்ன பலன்?