1. சந்திர திசையில், சூரிய புத்தி நடக்கிறது. இதற்கு என்ன பலன்?
🌟 தந்தைக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.
🌟 அரசு வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
🌟 பொருளாதார நிலை மேம்படும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. பத்தாம் இடத்தில் குரு, புதன் மற்றும் சூரியன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?
🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.
🌟 நேர்மையான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. கேட்டை நட்சத்திரம் ஆண்களுக்கு இருந்தால் தோஷமா?
🌟 கேட்டை நட்சத்திரம் ஆண்களுக்கு இருந்தால் தோஷமன்று.
🌟 அனைவரும் அனைத்து நட்சத்திரங்களிலும் பிறக்கலாம்.
4. ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
🌟 பித்ரு தோஷம் இருக்கும் பட்சத்தில் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளியுங்கள்.
🌟 மாதத்தில் ஒருமுறையாவது குலதெய்வ கோவிலிற்கு சென்று வழிபட வேண்டும்.
🌟 குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுதல் சுபிட்சத்தை ஏற்படுத்தும்.
🌟 பசு மாட்டிற்கு உணவு அளித்தல், அவற்றை பேணி காத்தல் போன்ற செயல்களால் பித்ரு தோஷம் நீங்கும்.
5. மகர ராசி, உத்திராட நட்சத்திரம், கன்னி லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 மற்றவர்களை ஆதரிக்கும் குணம் கொண்டவர்கள்.
🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
🌟 ருசித்து உணவு உண்ணக்கூடியவர்கள்.
🌟 பல விஷயங்களை அறிந்து கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. நீச்சம், வக்ரம் என்றால் என்ன?
🌟 நீச்சம் என்பது கிரகம் தன் வலிமை முழுவதும் இழப்பதாகும்.
🌟 வக்ரம் என்பது கிரகம் தன் பாதையை விடுத்து பின்னோக்கி செல்வதாகும்.