No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உணவருந்தும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

Nov 10, 2018   Ananthi   684    வாஸ்து 

1. தூங்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

நாம் உறங்கும் திசை இயல்பாக கிழக்கு மேற்காக இருப்பது சிறப்பு. சூரியன் உதிக்கும் திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இது ஆரோக்கியத்தை குறிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

2. சமையலறையில் சமைக்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

சூரியன் உதிக்கும் திசையில், கிழக்கு முகமாக நின்று சமைக்கும்போதும், சூரிய வெளிச்சம் உள்ளே வரும் படியான அமைப்புகளில் நின்று சமைக்கும்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சுவையான உணவாகவும் சமைக்க முடியும் என்று நமது முன்னோர்கள் ஆரோக்கியத்தை மையமாக வைத்து வலியுறுத்தி உள்ளார்கள்.

3. உணவருந்தும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

உணவருந்தும் திசை எக்காரணம் கொண்டும் வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தக் கூடாது என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். காரணம் ஆயுளை மையமாக வைத்தே குறிப்பிட்டுள்ளார்கள்.

4. பூஜை அறையில் சாமி படங்களை எப்படி இருப்பது சிறப்பு?

பூஜையறையில் உள்ள விக்ரகங்கள் சாமி படங்கள் வடக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருப்பது சிறப்பு. நாம் இறைவனை வணங்கும் போது வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ நின்று பக்கவாட்டில் பிரார்த்தனை செய்யும் பொழுது, அந்த பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து நமது முன்னோர்கள் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்கள்.

5. குழந்தைகள் படிக்கும் அறை எப்படி இருப்பது சிறப்பு?

குழந்தைகள் படிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து படித்தால் இயல்பாகவே ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நமது முன்னோர்கள் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.

6. கழிவறையின் கோப்பைகள் மற்றும் குளிக்கும் திசைகள் எப்படி இருப்பது சிறப்பு?

கழிவறையில் உள்ள கோப்பைகள் கிழக்கு மற்றும் மேற்கு முகமாக இருக்கும்பொழுது இறைவனை அவமதிப்பதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் தெற்கு, வடக்காக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள். இதே விதிமுறைகள்தான் குளியலறைக்கும்.

7. வரவேற்பறையில் சோபாக்கள் மேஜைகள் எப்படி இருப்பது சிறப்பு?

நம் வீட்டினுள் நுழையும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்கும் பொழுது, நாம் நிற்கும் திசை இயல்பாகவே கிழக்கு-வடக்காக வரவேண்டும் என்பதை மையப்படுத்தி சோபாகளையும், மேசைகளையும் மேற்கு முகமாகவும் தெற்கு முகமாகவும் அமைத்திருப்பார்கள்

8. பணம் வைக்கும் பெட்டிகள் எப்படி இருப்பது சிறப்பு?

ஒவ்வொரு அறையிலும் சரி மொத்த வீட்டு அமைப்பிலும் சரி பணம் வைக்கும் அறை என்பது தென்மேற்கில் வரவேண்டும். அதிலும் குறிப்பாக பணம் வைக்க கூடிய பணப்பெட்டி அதாவது பீரோ லாக்கர் போன்றவை வடக்கு முகமாக இருப்பது சிறப்பு, காரணம் அந்த பகுதியில் உள்ள பண பெட்டியில் பணத்தை வைக்கும் போது சேமிப்பு அதிகமாகும் என்பதை மையமாக வைத்து நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

9. காலம் சென்றவர்களின் புகைப்படத்தை எப்படி வைப்பது சிறப்பு?

பூஜை அறை, வரவேற்பறை, உணவு அருந்தும் அறை, விருந்தினர் அறை எப்படி எல்லா அறையிலும் இறந்தவரின் புகைப்படத்தை வடக்கு மற்றும் கிழக்கு முகமாக வைத்துக் கொள்வது சிறப்பு. காரணம் கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ நின்று நாம் அவர்களை பக்கவாட்டில் தரிசனம் செய்யும் பொழுது அவர்கள் ஆசீர்வதிக்க இயல்பாக இருக்கும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.


Share this valuable content with your friends