No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறை!!

Nov 08, 2018   Ananthi   529    ஆன்மிகம் 

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தகைய ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது கந்தசஷ்டி விரதம். கந்தனின் அருள் பெற, கந்தசஷ்டி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது எனப் பார்ப்போம்.

கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறை :

🌟 விரதத்திற்கு முதல் நாளே வீட்டினை சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.

🌟 கந்தசஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் நீராட வேண்டும்.

🌟 காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு வீட்டிலுள்ள சுவாமிக்கு பூக்களை வைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.

🌟 முருகன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டும்.

🌟 விரதம் மேற்கொள்ளும் நாளில், முருகனை மனதில் நினைத்துக்கொண்டு கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் போன்ற கவச நூல்களை பாட வேண்டும்.

🌟 திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தசஷ்டி கவசம் மற்றும் கந்தரது அனுபூதி போன்ற நூல்களையும் ஓதலாம்.

🌟 இந்த விரதத்தை அன்ன ஆதாரமின்றி ஆறு நாட்களும் கடைபிடிக்கலாம். இதை செய்ய முடியாதவர்கள் சஷ்டி அன்று முழு விரதம் இருந்து கந்தனை வழிபடலாம்.

🌟 பகலில் பழம் பால் மட்டுமே உண்ண வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம்.

🌟 காலை முதல் மாலை வரை குறைந்த அளவு பானம் மட்டும் அருந்தி மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் அல்லது இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

🌟 மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.

🌟 கோவில்களில் தங்கி விரதம் இருக்க முடியாதவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதம் இருக்கலாம்.

🌟 இவ்வாறு ஆறுநாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் என்னும் நிகழ்ச்சியை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

🌟 கந்தசஷ்டி விரதத்தை அவரவர் உடல் நிலைகளுக்கு தகுந்தவாறு அனுசரிக்க வேண்டும்.

🌟 முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.


Share this valuable content with your friends


Tags

தொழிலில் மேன்மையும் உள்ள ராசிக்காரர்கள் பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாதிப்புகள் கையில் உள்ள விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? விலங்குகள் துரத்துவது சர்ப்ப தோஷம் இல்லாத ஜாதகத்தை சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்துடன் இணைக்கலாமா? மார்ச் 06 03.06.2019 Rasipalan in PDF format!! நாய் குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? virussakam மூஞ்செலிகளை கனவில் கண்டால் என்ன பலன்? Mahara rāsi palaṉkaḷ.! ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தெய்வ வழிபாட்டில்... நாம் செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை...!! தினசரி ராசிபலன்கள் (14.06.2020) உலக பெண் குழந்தை தினம் அதிகாரமும் துன்பமும் big வைகாசி மாத ராசிபலன்கள் PDF வடிவில்!!