No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கந்தசஷ்டி விழா !!

Nov 07, 2018   Ananthi   502    ஆன்மிகம் 

🌟 பழநி, திருச்செந்தூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நாளை துவங்குகிறது. நவம்பர் 13ஆம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் :

🌟 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் நடக்கும் கந்தசஷ்டி விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களும் கலந்து கொள்வர்.

🌟 திருவிழா நாட்களில் தினமும், அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்படும். கோவிலில் உள்ள மண்டபத்தில், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கவுள்ளன.

சூரசம்ஹாரம் :

🌟 நவம்பர் 13ஆம் தேதி அதிகாலையில் நடை திறக்கப்படும். பின் மாலை நேரத்தில் கடற்கரையில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

பழநி :

🌟 பழநியில், நாளை உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டுதல் நடைபெறும். நவம்பர் 13ல் கந்தசஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மதியம், 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 2:30 மணிக்கு சன்னதி நடை சாத்தப்படும்.

சூரசம்ஹாரம் :

🌟 மாலை வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.

🌟 நவம்பர் 14ல் மலைக்கோவிலில் காலையில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.

ஆறுபடைவீடு :

🌟 முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் ஆறு தலங்களை மட்டும் படை வீடுகள் என அழைப்பர். போர் புரியச் செல்லும் தளபதி. தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் படைவீடு . சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகன், படைகளுடன் தங்கி இருந்த தலம் திருச்செந்தூர். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து ஆறுபடை வீடு என்கிறோம்.


Share this valuable content with your friends