🌟 அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடிக்கும் பட்டாசுகள், நாவில் ஊற வைக்கும் பலகாரங்கள் இவை மட்டுமின்றி செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் தான்.
🌟 தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.
🌟 லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
🌟 தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக சிறப்பு வாய்ந்தது.
🌟 தீபாவளி அன்று குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.
🌟 சதுர்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.
🌟 தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.
🌟 தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும்.
🌟 செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளி அன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும், குலதெய்வ கோவிலிற்கு சென்று வாருங்கள்.