No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை பாக்கியம் அருளும் சஷ்டி விரதம்!!

Oct 29, 2018   Ananthi   577    ஆன்மிகம் 

🌟 சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.

🌟 சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

🌟 குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.


சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி?

🌟 ஒவ்வொரு மாதத்திலும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

🌟 ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனம் உருக வணங்க வேண்டும்.

🌟 பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும், அட்சதையும் இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.

🌟 சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது.

🌟 சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

🌟 முருகனை ஆறு காலமும் பூஜை செய்ய வேண்டும்.

🌟 6 நாட்களும் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.

🌟 திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும்.

🌟 சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும் என்பது நம்பிக்கை.

🌟 விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.


Share this valuable content with your friends