No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் என்ன பலன்கள் தெரியுமா?

May 09, 2023   Ramya   197    ஆன்மிகம் 


செவ்வாய்க்கிழமை விரதம்...!!


🌺 நமது முன்னோர்கள் நவகிரகங்களில் ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு, வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.

🌺 அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க்கிழமை உண்டாயிற்று. கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். அதனால் தான் குடும்பத்தில் மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்கிறோம்.

🌺 முருகப்பெருமானுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாக செவ்வாய்க்கிழமை இருக்கிறது.

🌺 பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும்.

🌺 நவகிரகங்களில் ஒரு மனிதனின் இரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.

🌺 ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபட நன்மை உண்டாகும்.

விரதம் இருப்பது எப்படி?

🙏 செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் அதிகாலையில் நீராடி, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

🙏 பிறகு வீட்டிற்கு திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

🙏 கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

🙏 மாலை 6 மணிக்கு மீண்டும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும்.



விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

👉 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.

👉 பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும்.

👉 செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடம் வைத்தாலும், அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றி கொடுக்கும்.

👉 சிறுவாபுரி முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும்.


செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்..!!


Share this valuable content with your friends


Tags

காலபைரவரின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் புது வீடு கட்ட இருக்கிறீர்களா? - உங்களுக்கான சில வாஸ்து தகவல்கள்..!! சுனில் கவாஸ்கர் கைலாயம் குழந்தை பாக்கியம் உறவினர்கள் சாமிக்கு வைத்த நைவேத்தியத்தை நாய் சாப்பிட்டால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா? கர்ப்பிணி பெண்கள் கிரகண காலத்தில் தூங்கலாமா? கூடாதா? dhinasari horoscope எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜே.சி.குமரப்பா 4ல் கேது இருந்தால் என்ன பலன்? பிப்ரவரி 22 எந்த நேரத்தில் கனவு கண்டால் நிறைவேறும்? ஐப்பசி மாதம் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? புதையல் குரு திசையில் 4ல் புதன் இருந்தால் என்ன பலன்? காலபைரவருக்கு வீட்டில் விளக்கு ஏற்றலாமா?