மகிமை நிறைந்த சோமவார சங்கடஹர சதுர்த்தி...!!
🌟 கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார்.
🌟 எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும் பூஜிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஐதீகம்.
🌟 என்ன தான் வீட்டில் விதவிதமாக பிள்ளையார் சிலைகள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தி அன்று மஞ்சள் பிள்ளையாரை உருவாக்கி வழிபட்டு, மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
🌟 நாளை (08.05.2023) சித்திரை மாத சோமவார சங்கடஹர சதுர்த்தி என்ன செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.சோமவார சங்கடஹர சதுர்த்தி :🙏 விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும்.
🙏 "சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
🙏 சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
🙏 விநாயகரை போலவே விரதங்களில் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும்.
🙏 பின் வெள்ளெருக்கன் பூவை மாலையாக கோர்க்க வேண்டும். அம்மாலையில் உள்ள பூக்கள் 21 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு கோர்க்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து அவரை வணங்க வேண்டும்.
🙏 மேலும் அன்று விநாயகருக்கு நெய்வேத்தியமாக மோதகத்தை படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பண கஷ்டம், மன கஷ்டம் நீங்கும் மற்றும் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும்.
🙏 கோவிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே மோதகம், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.
🙏 மேலும், சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.