No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திர கிரகணத்தன்று கிரிவலம் போகலாமா?

May 05, 2023   Ramya   207    ஆன்மிகம் 


இன்று சித்ரா பௌர்ணமியும்... சந்திர கிரகணமும்..!!


🌝 பௌர்ணமிகளில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி. இது சித்ரகுப்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பண்டிகையாகும்.

🌝 இப்படி சிறப்புகளை பெற்ற சித்ரா பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

🌝 பொதுவாக பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

🌝 சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

🌝 சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் நேரம்

இந்திய நேரப்படி சந்திர கிரகணம் இரவு 8.44 மணிக்கு தொடங்குகிறது.

இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10 மணி 52 நிமிடம் 59 நொடியின் போது ஏற்படும்.

இந்த கிரகணம் மே 6ஆம் தேதி அதிகாலை 01.01 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த சந்திர கிரகணமானது இந்தியாவில் தெரிவதில்லை.

விரதம் இருப்பது எப்படி?

🌝 சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து, அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

🌝 மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பாசிப்பயறு, எருமைப்பால் சேர்த்து பாயாசம் செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

🌝 படையலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து கூட்டு செய்ய வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பானகங்களை தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல் ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

விரத பலன்கள் :

🌝 சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சந்திர கிரகணத்தன்று கிரிவலம் போகலாமா?

🙏 சித்ரா பௌர்ணமியன்று சந்திர கிரகணம் நிகழுவதால் கிரிவலம் போகலாமா? போகக்கூடாதா? என்று பெரும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

🙏 கிரகண காலம் முன்பு கிரிவலம் செல்லலாம். சந்திர கிரகணத்தின்போது உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

🙏 கர்ப்பிணி பெண்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும்.


கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை :

🙏 மலையை சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.

🙏 ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்ல வேண்டும்.

🙏 வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.

🙏 மலையை வலமிருந்து இடமாக மட்டுமே சுற்ற வேண்டும்.

🙏 கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சமநிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.

🙏 தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது நல்ல பலனை தரும்.

🙏 தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.

🙏கிரிவலம் தொடங்கும்போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.

🙏கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.


Share this valuable content with your friends