No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாவங்களை போக்கும் மோகினி ஏகாதசி விரதம்..!

May 02, 2023   Ramya   191    ஆன்மிகம் 


மோகினி ஏகாதசி...!!


🙇 ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பெயர் மட்டுமல்ல ஒவ்வொரு ஏகாதசியும் தனிச்சிறப்பும், பலன்களும் வாய்ந்தவை.

🙇 சித்திரை மாதமே தமிழ் வருடத்தின் முதல் மாதமாக உள்ளது. அந்த சித்திரை மாதத்தில் இறை வழிபாட்டிற்குரிய பல சிறப்பு மிக்க தினங்கள் வருகின்றன.

🙇 அந்த வகையில் இந்த வருடம் சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "மோகினி ஏகாதசி" எனப்படுகிறது. இந்த மோகினி ஏகாதசியில் விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

விரதம் இருக்கும் முறை :

🙇 ஏகாதசி திதி அன்று கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🙇 ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசி அன்று ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

🙇 மோகினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி மகாவிஷ்ணுவை வணங்க வேண்டும்.

🙇 ஆலயங்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே சுவாமிக்கு விரதமிருந்து வழிபடலாம்.

🙇 சுவாமிக்கு துளசியை சாற்றி, பழங்கள் முதலியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

🙇 அன்று துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை உண்டு வழிபடலாம்.

🙇 அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சாஸ்திரப்படி அன்று பகல், இரவு என இருவேளையும் தூங்கக்கூடாது.

🙇 இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பகவானை பற்றிய நூல்களை படிக்கலாம்.

🙇 இந்த வகையில் விரதமிருந்து மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

ஏகாதசி விரத மகிமை :

🙇 சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.

🙇 உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

🙇 ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனிதனின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் போன்றவை விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும்.


Share this valuable content with your friends