No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என்னென்ன அமைப்புகள் இருந்தால் கடன் ஏற்படும்?

Oct 25, 2018   Ananthi   715    வாஸ்து 

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றார் ஒரு புலவர். ஒரு வலிமை வாய்ந்த அரசனின் மனநிலையே கலங்கும் அளவிற்கு கடன் பட்டவரின் மன வேதனை இருக்கும் என்பதே இதன் உவமை.

ஒருவர் கடன் சுமைக்கு ஆளாவதருக்கு அவருடைய வீடு வாஸ்து சாஸ்திரத்தில் ஏதேனும் தொடர்புண்டா என்பதைப் பற்றி பார்ப்போம்.

பல பேர், நான் இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகுதான் கடன் வந்தது என்றும், நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது என்றும், நான் இந்த கட்டிடத்தை கட்ட ஆரம்பித்த பிறகுதான் எனக்கு கடன் வந்தது என்றும் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

நாங்கள் வீடு கட்டி இந்த இடத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது, அதுவரை எந்த கடனும் இல்லை. ஆனால், நாங்கள் ஒரு இடத்தை வாங்குவதற்காக முன்தொகை கொடுத்த பிறகுதான் எங்களுக்கு கடன் ஏற்பட்டது. இந்த நிலம் தான் அதற்கு காரணமா என்று கூட தெரியவில்லை? என்றும் சிலர் கூற கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கடன் சுமை ஏற்படுவதற்கு காரணம் வீட்டின் அமைப்பா? வாருங்கள், வாஸ்துபடி எந்தெந்த அமைப்பால் கடன் சுமை ஏற்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.


என்னென்ன அமைப்புகள் இருந்தால் கடன் வரும்?

1. தென்மேற்கு மாஸ்ட்டர் பெட்ரூம் தவிர மற்ற அமைப்புகள் வருவது.

2. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு மற்றும் வடக்கு மற்றொருவருடைய கட்டிடத்தில் சேர்ந்த அமைப்பு.

3. தெற்கு காலி இடம் அதிகமாகவும், வடக்கு காலி இடம் மிக மிக குறைவானதாக உள்ள அமைப்பு.

4. தென்மேற்கு பகுதியில் ஆறு, ஓடை, குளம், குட்டை, கிணறு போன்ற பள்ளமான அமைப்புகள்.

5. தென்மேற்கு தெருக்குத்து, தெருபார்வை போன்ற அமைப்புகள்.

6. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரோடு உயரமாக இருத்தல்.

7. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேம்பாலம் வந்துவிடுதல்.

8. நம்முடைய இடத்திற்கு தெற்கும், மேற்கும் உள்ள இடத்தை விலைக்கு வாங்குதல்.

9. தென்மேற்கு வாசல், படி அமைப்புகள் வருதல்.

10. வடமேற்கு பகுதியில் பள்ளமான அமைப்புகளில் கிணறு, போர், பம்ப் போன்றவைகள் வருதல்.

11. வடமேற்கு வளர்ந்த கட்டிட அமைப்புகள்.

12. தென்மேற்கு பெட்ரூம் வளர்ச்சியான அமைப்புகள்.

13. தென்கிழக்கு அக்னி மூலையில் கிழக்கு தெருக்குத்து.

14. வடமேற்கு வாயு மூலையில் வடக்கு தெருக்குத்து அமைப்பு.

15. வீட்டின் கிழக்கு பகுதியில் உயரமான ரோடு அமைப்பு.

16. வடக்கு முழுவதும் மூடிய தவறான போர்டிக்கோ அமைப்பு.

17. வீட்டின் தவறான படி அமைப்புகள்.

18. தவறான மேற்கூரை (High ceiling) அமைப்புகள்.

வாஸ்துபடி வீட்டில் இதுபோன்ற அமைப்புகள் வரும்போது கடன் சுமை ஏற்படும்.

மேற்கூறிய அமைப்புகள் இல்லாத வீட்டில் கடன் சுமைகள் ஏற்படுவதில்லை.


Share this valuable content with your friends