No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ராசமாபுரத்திற்கு பயணம் மேற்கொண்ட சீவகன்..!!

Mar 30, 2023   Ramya   122    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ராசமாபுரத்திற்கு பயணம் மேற்கொண்ட சீவகன்..!!

🌟 இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்த பொழுது நந்தட்டன் சென்று, இனியும் நாம் காலம் தாழ்த்தி இங்கேயே இருப்பதினால் நமக்கு ஒரு பலனும் ஏற்பட போவதில்லை. இந்த நொடியில் இருந்து கட்டியங்காரனின் காலம் முடிவடைந்து, உனக்கான காலம் பிறந்து விட்டது என்று கூறினான்.

🌟 அதற்கு சீவகன், பொறுத்தார் பூமி ஆள்வார் நந்தட்டா! பொறுமை அனைத்திலும் பெரியது என்று நமது குருநாதர் ஏற்கனவே நம்மிடம் கூறியிருக்கின்றார். அவர் சொன்ன காலம் முடிவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே இப்பொழுது நாம் பொறுமையுடன் தான் செயல்பட வேண்டும் என்றான்.

🌟 இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்ததை கேட்ட விசையை, உனக்கு தேவையான நண்பர்களின் கூட்டமும், சில அரசர்களின் உதவியும் தயாராக இருந்தாலும், கட்டியங்காரனை வீழ்த்துவதற்கு ஒரு பெரிய அரசருடைய உதவி இப்பொழுது உனக்கு தேவை. முதலில் நீ யார்? என்பதை அவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

🌟 உடனே அவ்விருவரும் ஒருசேர தாயை பார்த்து, யார் அந்த பெரிய அரசர்? என்று கேட்டனர்.

🌟 அவர் அரசர் மட்டுமல்ல! உன்னுடைய மாமனும் கூட! அவர் தான் விதேய நாட்டு மன்னனான கோவிந்தன். அவரே என்னுடைய உடன்பிறந்த சகோதரன் ஆவார்.

🌟 எனது கணவர் இறந்த நிலையிலும், உன்னை பிரிந்த வேதனையிலும் பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று ஒரு தெய்வம் என்னிடம் கூறியது. அதனால் தான் நான் உயிருடன் இருக்கின்றேன் என்பதை கூட அவருக்கு இப்பொழுது வரை தெரியப்படுத்தவில்லை என்று சோகத்துடன் கூறினார் விசையை.


🌟 இப்பொழுது தான் நான் வந்து விட்டேன் அல்லவா! இனி நீங்கள் தாராளமாக உங்களுடைய பிறந்த வீட்டிற்கு செல்லலாம். ஆனால் அதற்கு முன் சில பணிகளை நான் செய்ய வேண்டுமே! என்றான் சீவகன்.

🌟 அப்படி என்ன முக்கியமான பணிகள் செய்ய வேண்டும்? என்று கேட்டார் விசையை.

🌟 அதற்கு சீவகன், ஆம் தாயே! முக்கியமான பணி ஒன்று இருக்கின்றது. இன்று உங்களுக்கு ஒரு மகனுக்கு பதிலாக பல மகன்கள் கிடைத்திருக்கின்றோம். ஆனால் இன்னும் மகன் உயிரோடு இருக்கின்றானா? இல்லையா? என்றே தெரியாமல் துன்பத்தில் வாடி கொண்டே இருக்கின்றார்கள் என்னுடைய பெற்றோர்கள்.

🌟 அதாவது, கட்டியங்காரனின் சூழ்ச்சியில் அகப்பட்டு நான் இறந்து விடுவேன் என்று எண்ணி அவனிடமிருந்து என்னை காப்பாற்றுவதற்கு பல முயற்சிகளை எடுத்த என்னுடைய தந்தையான கந்துக்கடனும், எனக்கு பசி என்ற உணர்வு வந்த பொழுதெல்லாம் எனக்கு பாலூட்டி சீராட்டிய என்னுடைய தாயான சுநந்தையும் நான் இறந்து விட்டேன் என்று எண்ணி இன்னும் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் உயிருடன் இருப்பது தெரியாது. இப்பொழுது அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமும் வந்துவிட்டது என்றான்.

🌟 சீவகன் தனது வளர்ப்பு பெற்றோர்களை பற்றி கூறுவதை கேட்ட விசையை, தனது மகன் இரு வேறுபட்ட சூழ்நிலைகளால் பீடிக்கப்பட்டு இருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டார்.

🌟 பின் அவனிடம் சென்று, எதற்கும் நீ கவலைப்பட வேண்டாம்! இப்பொழுது நீ ராசமாபுரத்திற்கு சென்று உனது தாய், தந்தையர் இருவருக்கும் நிகழ்ந்த உண்மைகள் அனைத்தையும் கூறிவிட்டு, அவர்களின் ஆசிகளை பெற்று அங்கிருந்து விதேய நாட்டிற்கு புறப்பட்டு வா! நான் உனக்காக விதேய நாட்டில் உன்னுடைய மாமனிடம் உண்மையை எடுத்து கூறி, போருக்கான தயார் நிலையில் இருக்கின்றேன் என்று கூறினார்.

🌟 சிறிது நேரத்தில் ஆசிரமத்தில் இருந்த அனைவரிடமும் ஆசி பெற்று அங்கிருந்து விடைபெற்ற சீவகன் சிறுப்படையுடன் ராசமாபுரத்தை நோக்கியும், சீவகனின் நண்பர்களும், மற்ற படை வீரர்களும் விசையையுடன் விதேய நாட்டை நோக்கியும் பயணத்தை மேற்கொண்டார்கள்.


Share this valuable content with your friends