No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூமி பூஜை போட சிறந்த நாள் எது?

Jun 25, 2018      3902    வாஸ்து 

🏠 வாஸ்து சாஸ்திரப்படி பூமி பூஜை போட சிறந்த நாள் எது? வாஸ்து நாளில் பூமி பூஜை போடலாமா? என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

🏠 நாம் கட்டக்கூடிய வீடு, நாம் நீண்ட காலத்துக்கு நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கக் கூடியது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டை நாம் கட்டும்போது அதற்கு உரிய மிக சிறந்த நல்ல நாளை தேர்ந்தெடுத்து பூமி பூஜை போடுவது சிறப்பு.

வாஸ்து நாள் :

🏠 வாஸ்து நாள் என்பது பூமி பூஜை போட உருவாக்கப்பட்ட நாள். ஆனால் அந்த வாஸ்து வரக்கூடிய நாள் 1. பிரதமை திதியில் வருவது 2. தேய்பிறையில் வருவது 3. கிழமை சரியாக வருவதில்லை 4. ஆடி மாதம் வருகிறது. அப்போது வாஸ்து நாள் என்பது என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

🏠 வாஸ்து நாளில் பூமி பூஜை போட்ட பல வீடுகளைப் பார்த்தால், அவர்களால் வீட்டு வேலையை விரைந்து முடிக்க முடியவில்லை. ஆகையால் பூமி பூஜை போட சிறந்த நாள் என்றால் அது 1. வளர்பிறையில் சுபமுகூர்த்த நாளில் ஒரு சில நல்ல நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் பூமி பூஜை போடுவது சிறப்பு.

🏠 பூமி பூஜை போடுவது மட்டுமே நல்ல நாளை பார்த்துவிட்டு ஏதோ ஒரு ப்ளான் படி வீட்டை கட்டினாலும் வேலை தடைபடுவது உறுதி. அதேப்போல் நாம் வாங்கக்கூடிய இடமும் சரி, நம்முடைய இடமாகவே இருந்தாலும் நாம் வீடு கட்டக்கூடிய இடம், நாம் வாஸ்துப்படி வீடு கட்ட தகுதியான இடமா என்பதை தெரியாமல் ஏதாவது தவறான இடத்தில் கட்டிட வேலையை ஆரம்பித்தாலும் வேலை முற்றுபெறாது.

🏠 நீங்கள் கட்டக்கூடிய இடம் நல்ல இடமாக இருக்க வேண்டும். நல்ல வாஸ்து சாஸ்திரப்படியான பிளான் இருக்க வேண்டும். நல்ல வளர்பிறை முகூர்த்தநாளில் தொடங்க வேண்டும். இதில் எங்கு தவறு நடந்தாலும் அதனால் தடைபடுவது உங்களுடைய கட்டிட வேலை மட்டுமல்லாது உங்களுடைய வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும்.


Share this valuable content with your friends