🌸 ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். இவர் அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆவார். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர் வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.
🌸 இவரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் ஆஞ்சநேயரை எவ்வாறு வழிபடலாம்? என இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆஞ்சநேயர் வழிபாடு :
🌸 ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.
🌸 அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் கஷ்டங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
🌸 துளசி மாலையும், வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. எனவே சனிக்கிழமை வெற்றிலை மாலையை சாற்றி அனுமன் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.
🌸 திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை அன்று வெற்றிலை மாலை சாற்றலாம்.
🌸 அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள் ஆகும். வெற்றி கிடைத்திட இவருக்கு திராட்சைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.
🌸 அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவிக்க அனுமனின் அருள் பெறலாம்.
🌸 அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
🌸 துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாற்றி வழிபடலாம்.
🌸 விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்"
HUSBAND டைகர் வரதாச்சாரியார் குரு உங்களுக்கு இந்த இடத்தில் இருந்தால்... பொருள் ஈட்டுவதில் வல்லவராக இருப்பீர்கள்...!! சித்திரை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தர்மகர்மாதிபதி என்பதன் முழு விளக்கம் என்ன? புரட்டாசி மாதம் பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றலாமா? நான் என்னுடைய காதலியை அடிப்பது போலவும் jothider question oand answer ஏப்ரல் 15 பார்வதி தேவி சிங்கம் துரத்துவது போல் துலாம் ராசிக்கு குரு திசை bangles march 26 long hair வெள்ளை நிற நாகம் என்னை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை? திருமணத்திற்கு பத்திரிக்கை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? bridge daily rasipalan - 25.06.2018